முக்கிய செய்திகள்

ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது : பியூஷ் கோயல்

ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத் தொகையை 90 நாட்கள் வரை செலுத்தாமல் இருந்தால்

மொத்தக் கடனையும் வராக்கடன் பட்டியலில் சேர்த்து அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் தவணையைச் செலுத்த ஒரு நாள் தாமதமானாலும் வாராக் கடனாக,

தொடர்புடையவரின் சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்ய எண்ணமில்லை என ரிசர்வ் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 90-வது நாளில் தொகையை செலுத்த முடியாமல் இருப்பதாலேயே அதனை வாராக்கடனாகக் கருதிவிடக் கூடாது என்றும் விதிகள் குருட்டுத் தனமானவையாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.