உள்ளாட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி,ஒன்றி,மாவட்ட பிரதிநிதி என கட்சி சின்னத்தில் போட்டியிடும் இடங்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.
நவம்ர் 14-ஆம் தேதி முதல் திமுக விருப்பமனுக்களை பெற்“று வருகிறது. திமுகவிலும் பல மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு விருப்பமனு அளித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் உதயநிதி போட்டியிட 2 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அதிமுகவில் வாரிசுகளுக்கு சீட்கேட்டு பலர் விருப்ப மனு பெற்றுள்ளதைப் பார்த்து அதிமுக தொண்டர்கள் பலர் முகம் சுழித்து வருகின்றனர்.
சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தன் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இது போல் தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ராஜாவும்,மைத்துனர் பெரியகுள நகராட்சிக்கு சீட்கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். இது போல் அதிமுக அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் தங்கள் வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வாங்க திட்டமிட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிகள் வேறு அதிக இடங்கள் கேட்டு வரும் நிலையில் அதிமுக என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுக நிர்வாகிகள் பலர் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகலாம் என ஆருடம் சொல்லி வருகின்றனர்.