முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி ஆர்எஸ்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாக்குப்பெட்டி மையங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.