பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தார்கேல் பகுதியில், அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து பொதுமக்கள் பேரணியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பினர். இந்தியாவுடன் இணைந்திருக்கும் பகுதிகள் போக, மற்ற காஷ்மீரின் மற்ற பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்தப் பகுதியில் தான் தீவிரவாதக் குழுக்கள் பதுங்கி இருந்து இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த மண்ணின் மக்கள் அமைதி இழந்து தவிக்கின்றனர். எந்த நேரமும் போர் மேகம் சூழ்ந்த பூமியில் அமைதி எங்கிருந்து வரும்? அதுதான் தற்போது அமைதி கேட்டு அந்த மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர். அவர்கள் கோரும் அமைதி, விடுதலையில் தான் இருக்கிறது என்பதால், அதனைக் கேட்டு போராடத் தொடங்கி உள்ளனர். கெட்ட போராசை பிடித்த அரசுகளுக்கு எளிய மக்களின் குரல் காதில் விழ வேண்டுமே!
Locals organised a rally in Tharkhel area of Pakistan Occupied Kashmir