கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-
ஊரடங்கு தளர்வு 4.0 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
கண்டெயின்மண்ட் சோன் எனப்படும் கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் எந்த வித தளர்வுகளும் கிடையாது.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை பகுதி நேரமாக இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, பண்பாடு, மதம், அரசியல் சாந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்து அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் முகக்கவசம், சமூக இடைவெளி, தெர்மல் ஸ்கேனிங், சானிட்டைசர் உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி
பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டிருக்கும்
ஆன்லைன் வகுப்புகளை நடத்த 50 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் அனுமதியுடன் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க வரலாம்.
சினிமா தியேட்டர், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்கு( திறந்தவெளி திரையரங்கு தவிர), செயல்பட அனுமதியில்லை.
மத்திய அரசு அனுமதிக்கும் பயணத்தை தவிர எஞ்சிய சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
மத்திய அரசுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் மாநில அரசுகள் நோய் கட்டுப்பாட்டு பகுதியை(கண்டெயின்மண்ட் சோன்) தவிர பிற பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தப்படகூடாது.
உள்மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேவும் மக்கள் செல்ல எந்த அனுமதியோ, இ-பாஸ் அல்லது சிறப்பு அனுமதியோ தேவையில்லை.