ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வு…

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது.
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல்  இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது
ஊரடங்கு பாதிப்பு,மற்றும் சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் போன்ற காரணங்களால் ஆம்னி பெருந்துகளின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.

ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து;

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை மையம்..

Recent Posts