முக்கிய செய்திகள்

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து இருவரின் நியமனத்திலும் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்