முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையர் பேட்டி நேரலை

நாடுமுழுவதும்  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையர் அறிவித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டு வருகிறார்.

அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. 18 – 19 வயதுக்குள் இருக்கும் வாக்காளர் எண்ணிக்கை 1.5 கோடி

அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்து கைபேசி மூலமாக புகார் செய்ய ஏற்பாடு

பூத் ஸ்லிப்புகளைக் கொண்டு வாக்களிக்க முடியாது

மாற்றுத்திறனாளிகள் வசதிகளைக் கோர தனி செயலி அறிமுகம்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிக்கு தடை

சமூகவலைத் தளங்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான தகவல்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்