நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் முதல் நாளிலேயே 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தென் சென்னையில் 3, திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.