மக்களவைத் தேர்தல் 2019 -: தேர்தல் அட்டவணை வெளியீடு..

மக்களவைத் தேர்தல் 2019க்காண – தேர்தல் அட்டவணையை அறிவித்து வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

17 வது மக்களவைத்  தேர்தலை சுதந்திரமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தேர்தல் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 தேதி நடைபெறும் .

முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது.

 

முதல் கட்டம் – ஏப்ரல் 11

2வது கட்டம் – ஏப்ரல் 16

3வது கட்டம் – ஏப்ரல் 23

4 வது கட்டம் – ஏப்ரல் 29

5 வது கட்டம் – மே 05

6வது கட்டம் – மே 12

7 வது கட்டம் – மே 18

மே 23ல் வாக்கு எண்ணிக்கை

 

ஏப்ரல் 18 – தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்

தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து புகார் அளிக்கப்படும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்.

புகார் அளிக்கும் நபர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  .

தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.

கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறவேண்டும்