முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு : ஜெ.தீபா அறிவிப்பு..

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவளிப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தீபா விளக்கமளித்துள்ளார்.