வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.
விருப்ப மனு பெற விரும்புவோர் ரூ.25,000 செலுத்தி மனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பிப்.,10 ம் தேதி மாலை 5 மணி வரை தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெறலாம்.