மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தேதியான மே 23-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.