முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல்: காங்., முதல் வேட்பாளர் பட்டியல்.: அமேதியில் ராகுல் போட்டி..

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 தொகுதிகளில் போட்டியிடுவோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மேற்கு தொகுதியில் ராஜூ பார்மரும், ஆனந்த் தொகுதியில் பாரத் சிங் சோலங்கியும்,

வதோதராவில் பிரசாந்த் பட்டேலும், சோட்டா உதய்பூரில் ரஞ்சித் மோகன்சிங் ரத்வாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஷகரான்பூரில் இம்ரான் மசூத்தும், படான் தொகுதியில் சலீம் இக்பாலும், தாகுராகரா தொகுதியில் ஜிதின் பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உன்னாவ் தொகுதியில் அனு தாண்டனும், ரேபரேலியில் சோனியா காந்தியும்,அமேதியில் ராகுல்காந்தியும் போட்டியிடுகின்றனர்.

பரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித்தும், அக்பராபூரில் ராஜராம் பாலும், ஜாலன் தொகுதியில் பிரிட்ஸ் லால் கபாரியும்,

பாசியாபாத்தில் நிர்மல் கடாரியும், குஷி நகரில் ஆர்.பி.என்.சிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.