மக்களவைத்தோ்தல் நடைபெறும் ஏப்.18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 11ம் தெதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சோ்த்து ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பொதுத் தோ்தலில் தகுதியுடைய வாக்காளா்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை கட்டாய வாக்குப்பதிவு

மூலம் அளிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கட்டாய வாக்குப்பதிவு தொடா்பாக விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் தே்ாதல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி பொது விடுமுறை விடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிருத்தியும், வாக்காளா்களுக்கு வாக்கு செலுத்த இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப் போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என புகார் : தமிழக அரசு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு..

சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் : மனநல மருத்துவர் ஷாலினி

Recent Posts