மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு தேர்தல் ஆணையம்..

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பதை முடிவு செய்ய பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர், தேர்தல் அலுவலர்கள், உள்ளிட்ட ஏற்பாடுகளைப் பொருத்தே தேர்தல் தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்துவதுதொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.

தவறவிடாதீர்…: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம்..

கொல்கத்தா மாநாடு பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமையும் : மு.க.ஸ்டாலின்..

Recent Posts