முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை : மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தோழமை கொண்டிருந்த கட்சிகளுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்றார்.

தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி முதலில் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்ற அவர், அதன் பின்னர் எந்தெந்த தொகுதிகளை எந்தெந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த தொகுதிகளுக்கான ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறமென ஸ்டாலின் தெரிவித்தார்.