மக்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன.

பாஜகவின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார்.

தற்போது சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கம் இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை

தமிழக மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக குழு கூட்டணி பேச்சுவார்த்தை நடைத்தி வருகிறது.