முக்கிய செய்திகள்

மக்களவை தேர்தல் : ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

எஸ்.டி கூரியர்ஸ் நிறுவனத்தில் தலைவராக இருப்பவர் நவாஸ் கனி என்பது குறிப்பிடத்தக்கது.