முக்கிய செய்திகள்

அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக்கவுட் நோட்டீஸ்!

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச் செழியன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

அவர் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அன்புச் செழியனை பிடிக்க கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை துப்பு துலங்காத நிலையில் அன்புச் செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு விமான நிலையங்கள்  உஷார்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

Lookout notice to Anbucheziyan