மனதை கொள்ளை கொள்ளும் திருமூர்த்தி அருவி..

இயற்கை அழகு என்றால் அதனோடு இயைந்து வாழ்வதும் பேரழகு தான்,இயற்கையை இறைவனாக வணங்குவது நம் பண்பாடு,
அத்தகைய இயற்கையை மனிதன் தன் சுயலாபத்திற்காக அழித்து விட்டு தற்போது இயற்கையைத் தேடி ஓடுகிறான். இன்றைய சூழலில் பொருளாதாரப் போராட்டம் மனிதனை நிலை குலையச் செய்துவிட்டது. அதில் தான் நாம் மூழ்கி கிடக்கிறோம். நேரமில்லை.. நேரமில்லை என வாழ்க்கையின் கடைசி மூச்சுள்ளவரை நம் போராட்டம் ஓய்ந்த பாடிலில்லை.


அரிது..அரிது மானிடராய் பிறத்தல் அறிது என்றார் ஔவை பாட்டி, ஆம் மனிதராய் பிறந்து நவீனயுகத்தில் இயந்திரம் போல் நாம் வாழ்கிறோம்.
மனம் அமைதியின்றி அலைகிறது. பிணிகளோ தினந்தோறும் பயமுறுத்துகின்றன. மனம் அமைதியும், புத்துணர்வும் தேவை என்கிறது.
இத்தகைய புத்துணர்வை தருவது சுற்றுலா தலங்களே, அதில் மலைகள்,அருவிகள்,ஆன்மீகத் தலங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

மலையும்,அருவியும் ஆன்மீகமும் ஒருங்கே அமைந்த இடம்தான் திருமூர்த்தி மலை, அருவி,கோயில்
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் மலையைக் காண கண்கோடிவேண்டும். ஆன்மீகத் தேடலுக்கு இங்கு வழி இருக்கிறது. மன அமைதியும், புத்துணர்வும் அள்ளித்தரும் மலை.


திருமூர்த்தி அருவி தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை ஆனைமலை பகுதியில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது.
திருமுர்த்தி மலையின் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தோணி ஆற்று நீர் இந்தக் கோயிலை சுற்றி செல்வதைப் பார்க்கும் போது மனம் சிலாய்க்கிறது.


பஞ்சலிங்க அருவி
அமணலிங்கேஸ்வரர் கோயிலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாதை எங்கும் ஆற்று நீர் மலையில் வழிந்தோடும் ஓடும் போது மணிச்சலங்கைகள், மத்தளங்கள் ஒலிப்பது போல் இசையருவி நம் காதுகளுக்குள் ஓசையிடுகின்றன. நீண்ட நெடிய மரங்கள், அதில் துள்ளி விளையாடும் வானரங்கள் என நம் மலை ஏற்றத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி, அருவியை நெருங்கும் போது மனம் இலேசாகிறது. அருவியிலிருந்து கொட்டும் நீரின் அழகு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அருவியல் குளிக்கும் போது நாம் அடையும் எல்லையில்லா ஆனந்தத்தை அளவிட முடியாது.
உடலுக்கு புத்துணர்வளிக்கிறது. இறையருள் தேடியவர்கள் மெய்மறந்து பரவசம் அடைகின்றனர். அருவிக்கு மேலே பஞ்சலிங்கம் அமைந்துள்ளது. கைலாய மலையே இங்கு காட்சியளியப்பது போல் பிரமிப்பு உண்டாகிறது.


அமணலிங்கேஸ்வரர் கோயில்
மலையின் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. பல திரைப்படங்களில் இந்த கோயிலைப் பார்த்துள்ளோம். இறைவன் சிவன் இங்கே சுயம்பாக குன்று வடிவாக காட்சியளிக்கிறார். குன்றின் குடவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் அமைந்துள்ளனர்..
குன்றைச்சுற்றி தோணியாற்று நீர் சலசல என ரீங்காரம்மிட்டு தழுவிச் செல்கின்ற அழகே அழகுதான்.
சப்த கன்னிகள் நதி நீரின் மேல் நின்று நமக்கு அருள்பாலிக்கின்றனர். விநாயகர்,பாலமுருகனுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் குன்றின் மீது வேண்டுதல் நிறைவேற சந்தனத்தை வீசுகின்றனர். அதுபோல் உப்பும் கொட்டப்படுகிறது.


8 கால் மண்டபம்.
அமணலிங்கேஸ்வரர் கோயின் முன்பகுதியில் 8 கால் மண்டபம் சிறிய அளவில் அழகுற அமைந்துள்ளது. 8 மண்டபத்திற்கு இடப்பக்கம் வசந்த மண்டபம் அமைந்துள்ளது.
கோயிலின் முன்பகுதியில் 30 அடி உயர விளக்குத்துண் அமைந்துள்ளது.
அருவியின் நீரானது அமணலிங்கேஸ்வரர் பாதம் தொட்ட பின் திருமூர்த்தி அணைக்கு சென்று சேர்கிறது.

திருமூர்த்தி அணை
ஆனைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது. இதில் 8622 அடி நீளம் கொண்ட களி மண் அணையும் 170 அடி நீளம் கொண்ட கல் அணையும் அடங்கும். 1337 அடி கொண்ட முழு நீா்த்தேக்க மட்டத்தில் இந்த அணையின் மொத்த கொள் திறன் 1935 மில்லியன் கன அடியாகும்.
ஒரு முறையேனும் திருமூர்த்தி மலைக்குச் சென்று எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெருங்கள்…

அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளுக்கான ஏப்.,2023 தேர்வு முடிவுகள் வெளியீடு…

எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…

Recent Posts