குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுவதாகவும்,

வருகிற 6-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மெரினாவில் போராட அனுமதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்..

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கண் கலங்கினார் நடிகர் சசிகுமார்..

Recent Posts