முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகம்,புதுவையில் மழைக்கு வாய்ப்பு..


தமிழகத்தில் தற்போது குளிர்காலம் நிறைவடைந்து வெயில் காலம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சென்னை, கோவை, குமரி, நெல்லை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.