சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு : நள்ளிரவு முதல் அமல் ..

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்தும், மானியமில்லாத சிலிண்டரின் விலையை ரூ. 133 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

கடந்த 1ம் தேதி வரி வகை உயர்வு காரணமாக சிலிண்டர் விலை ரூ.2.94 உயர்த்தப்பட்டது. அடுத்த எட்டே நாட்களில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப் ரூ. 2 உயர்த்தப்பட்டது.

இந்தாண்டு ஜூலை முதலே, சிலிண்டர் விலை ஏறுமுகமாகவே உள்ளது. ஜூலை முதல் நேற்று வரை எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 16.21 வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் முதல்முறையாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்தும், மானியமில்லாத சிலிண்டரின் விலையை ரூ. 133 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்பு முன்னதாக, மும்பையில் ரூ.505.05 ரூபாயாகவும், டெல்லியில் 507.42 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 510.70 ரூபாயாகவும், சென்னையில் 507 ரூபாயாகவும் சிலிண்டர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 12 14.2 கிலோ சிலிண்டரை மானிய விலையில் அளிக்கிறது.

மானியத் தொகையை நேரடியாகவே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த மானியத்தை விரும்பினால் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கலாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.