முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகள் குறித்து கருத்து தொிவித்த அமைச்சா் விஜயகலா கைதாகி விடுதலை..

இலங்கையில் தமிழா்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்று கருத்து தொிவித்த அந்நாட்டு அமைச்சா் விஜயகலா கைதாகி ஜாமீனில் விடுதலை.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றல் பேசிய இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

“வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும்.

தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்” என்று கூறியிருந்தாா்.

அமைச்சரின் கருத்து அந்நாட்டில் பெரும் சா்ச்சையை கிளப்பிய நிலையில் பல்வேறு நெறுக்கடிகளின் பேரில் அவா் தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து விஜயகலா தரப்பில் நீதிமன்றத்தை நாடப்பட்டது. அதன்படி கொழும்பு நீதிமன்றம் விஜயகலா ரூ.5 லட்சத்தை செலுத்திவிட்டு ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று தொிவிக்கப்பட்டது. அதன் பின்னா் விஜயகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா்.