முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..


சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக, இலங்கை ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் 27 ஆண்டுகளாக போர் நடத்தினர். பிரபாகரன் தலைமையில் நடந்த இந்தப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில், பிரபாகரன் கொல்லப்பட்டார்.

போர் முடிவுற்றாலும், அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் தங்கள் அமைப்பிற்காக நிதி திரட்டிய விடுதலைப் புலிகள் அமைப்பினரை சுவிட்சர்லாந்து போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் சுவிட்சர்லாந்தில் குற்ற செயலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என கூறி, அவர்களை விடுதலை செய்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.