மீ டுவில் மாட்டிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார்

பதினைந்து பெண் பத்திரிகையாளர்களால் மீ டு இயக்கத்தின் கீழ் பாலியல் புகாருக்கு ஆளான மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இறுதியாக தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எம்.ஜே.அக்பர் அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் பல்வேறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

அந்த காலகட்டங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 15 பெண் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் முதலில் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்பவர் மீது அக்பர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

அக்பர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை அவர் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், 15-வது பெண்ணாக துஷிதா படேல் என்ற பெண் புகார் தெரிவித்தார். தி எசியான் ஏஜ் பத்திரிகையில் அக்பர் ஆசிரியராக இருந்தபோது அங்கு இந்தப் பெண் பணியாற்றியிருக்கிறார். அப்போது அக்பர் பாலியல் தொல்லை அளித்ததாக துஷிதா புகார் கூறியிருந்தார். இதுகுறித்து இணையதளம் ஒன்றில் கட்டுரை எழுதிய துஷிதா குறிப்பிட்டிருந்ததாவது:

 “எம்.ஜே. அக்பர் வலுக்கட்டாயமாக இருமுறை முத்தம் கொடுத்தார். ஒருமுறை ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவர் உள்ளாடையுடன் என்னை வரவேற்றார்.

இன்றைக்கு அக்பர் செய்த தவறுகளைப் பற்றி நான் பேசாவிட்டால் அவர் செய்த குற்றங்களுக்கு நான் உடந்தையாக இருந்ததை போன்று ஆகிவிடும். இதற்கு முன்பாக 1992-ல் இன்னொரு பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என் தொலைப்பேசி என்னைப் பெற்றுவிட்டு தேவையின்றி என்னை அழைப்பார். ஒருமுறை வேலை விஷயமாக அவரை ஹோட்டல் அறையில் சந்தித்தபோது, வலுக்கட்டாயமாக எனக்கு முத்தம் கொடுத்தார். அவரை உதறி கத்திவிட்டு சாலைக்கு ஓடிச் சென்றேன். அங்கு ஆட்டோவில் ஏறியதும் அழத் தொடங்கினேன். இதேபோன்ற சம்பவம் அடுத்த நாள் காலையிலும் ஏற்பட்டது. பொய் பேசுவதை அக்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு எதிரான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம். நாங்கள் யாரையும் குழப்பவில்லை. நாங்கள் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது

என்று துஷிதா அதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று எம்.ஜே. அக்பர் தமது வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள கடிதத்தில், தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தமது சொந்தப் பொறுப்பிலேயே நீதிமன்றத்திற்கு சென்று நீதியைப் பெறுவதற்கு ஏற்ப பதவியை ராஜினாமா செய்தவசாத குறிப்பிட்டுள்ளார். தமக்கு அமைச்சராகும் வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இருவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

M.J.Akbar resigns from his post of State External Affairs MEA

என்னை கொல்ல இந்திய உளவுத்துறை அமைப்பான “ரா“ சதி : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு..

சபரிமலை விவகாரம் : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்..

Recent Posts