முக்கிய செய்திகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

சென்னை கொளத்தூரில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். பேப்பர்ஸ் மில்ஸ் சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சென்னை சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் பங்கேற்றார். அவர்களும் கைது செய்யப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையி்ல் போராட்டம் நடைபெற்றது. அவர்களும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிற பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற  திருமாவளவன் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

M.K.Stalin And others Arrest  in Chennai