முக்கிய செய்திகள்

அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். 

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அரவக்குறிச்சியில் காலையில் மக்களை நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின் பின்னர் பகலிலும், மாலையிலும் மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே பிரச்சாரம் செய்தார்.

அந்தப் பகுதியில் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியலிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்துக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி,  திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.