தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது: மு.க ஸ்டாலின்..


தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டி அளித்துள்ளார். வேலை இல்லாத திண்டாட்டத்தைப் போக்குவது குறித்து ஆளுநர் உரையில் சொல்லவில்லை என்றும் விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.