ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புத் துண்டணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூர் சென்ற ஸ்டாலின் அங்கு முதலமைச்சராக பங்கேற்ற அசோக் கெலாட், துணை முதலமைச்சராக பதவியேற்ற சச்சின் பைலட் இருவரையும் தனித்தனியே சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர், மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிலும் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு ம.பி முதலமைச்சராக பதவியேற்ற கமல்நாத்தை ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளின் போது திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புத் துண்டை அணிந்து வசீகரமாக தோற்றமளித்தார். விழா மேடையில், ராகுல் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுடன் கரம் கோர்த்து உயர்த்தி நின்ற ஸ்டாலின், தனது அரசியல் நிலைப்பாட்டை அகில இந்திய அரசியல் அரங்கிற்கு உணர்த்தினார்.
அவருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்தப் படங்களை அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Many congratulations and best wishes to the CM of Madhya Pradesh, Thiru @OfficeOfKNath and to the CM & Deputy CM of Rajasthan, Thiru @ashokgehlot51 & Thiru @SachinPilot on their swearing-in today. pic.twitter.com/MXu25M5bk9
— M.K.Stalin (@mkstalin) December 17, 2018