முக்கிய செய்திகள்

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கட்சி வேறுபாடின்றி அனைவராலும் மதிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவுக்கு இன்று 94 ஆவது பிறந்த நாள்.

இதையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று காலை சென்னை தியாகநகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர்  தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழும் வரலாறு, தியாகத்தின் திருவுருவம், பாட்டாளிகளின் பாதுகாவலர், தலைவர் கலைஞரின் தோழர், எங்களின் வழிகாட்டி அய்யா நல்லகண்ணு அவர்கள் நலமுடனும் துடிப்புடனும் வாழ்ந்து வழிகாட்ட வணங்கி வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் நல்லகண்ணுவிற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இதேபோல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.