முக்கிய செய்திகள்

மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பி வழிகிறது..


தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றான மதராந்தகம் ஏரி தற்போது மீண்டும் நிரம்பி வழிகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி 2வது ஏரியாக நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு 9800 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. ஏரியில் இருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.