காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான 23.30 அடியில் 20.50 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியிliருந்து உபரி நீர் கிள்ளியாற்றில் திறந்துவிடப்படுகிறது.
