பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை : மத்தியபிரதேச அரசு சட்டம்..


12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வழிசெய்யும் மசோதா மத்திய பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்கள குறிவைத்து இதுபோன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர். இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா மத்திய பிரதேச சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதா மத்திய சட்டத்துறை அமைச்ச்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பின் இந்த சட்ட திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ம.பி. அரசின் இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


 

பிரபல இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்..

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுகவினர் அஞ்சலி…

Recent Posts