மதுரையில் ஆகஸ்ட்.20ல் அதிமுக மாநாட்டு: இலச்சினை வெளியீடு..

மதுரையில் ஆகஸ்ட்.20ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை
அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார்.

அதிமுக உடையவில்லை, சிந்தவில்லை, சிதறவில்லை, கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும். 75 நாட்களில் அதிமுகவில் 1.6 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சில மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது உட்கட்சி பிரச்சனை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்தி வருகிறோம்; மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தேர்தல் வரும்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அதிமுக தெளிவுபடுத்தும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; நேரம் வரும்போது கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம் என்று பழனிசாமி குறிப்பிட்டார்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில்தான் பாஜ கட்சி உள்ளதாக டெல்லி மேலிட தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் :கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்…

Recent Posts