முக்கிய செய்திகள்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும்: மத்திய அரசு பதில்

மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

மேலும் நிதிக்குழு ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் என அரசு பதில் அளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு பதிலில் குறிப்பிட்டுள்ளது.

எய்ம்ஸ் திட்டமதிப்பீடு மத்திய குழு ஒப்பிதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியி்ட கோரிய வழக்கில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.