தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி ஆகம விதிப்படி கோயிலுக்குள் நடந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.
மேலும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.14-ம் தேதி (வியாழக்கிழமை), ஏப்.15-ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அதனையடுத்து வரும் ஏப்.16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. இதனிடையே காவலர்களின் பலத்த சோதனைக்குப் பிறகே தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை சித்திரை திருவிழா 2022 எப்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் உள்ளிட்ட திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எப்போது தேதி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்
ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலாஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (Meenakshi Sundareshwarar Thirukalyanam 2022) யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவைஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)
ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்
ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.
ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..அனைவரும் மாமதுரை நகருக்கு வருக..
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வார், கள்ளழகரின் அருள் பெருக