முக்கிய செய்திகள்

மதுரை : கன்டெய்னர் முழுக்க கவரிங் நகைகள் சோதனையில் தெரியவந்தது….

மதுரையில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரியில் தங்க நகைகள் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கன்டெய்னர் லாரியை மடக்கி பிடித்த போலீசார், உரிய ஆவணங்கள் இல்லாதாதல் அந்த லாரியை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட லாரியில் தங்க நகைகள் இருப்பதாக வெளியான தகவலால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான பெட்டிகளில் மோதிரம், வளையல் உள்ளிட்ட நகைகள் இருந்தன.

சோதனையில் அந்த நகைகள் அனைத்தும் கவரிங் என்பது தெரியவந்தது. இது அதிகாரிகளை திசை திருப்பும் முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.