
மதுரையில் நீண்ட நாளைக்குப் பிறகு வரலாறு காணாத அளவிற்கு வெளுத்து வாங்கிய கனமழை கொட்டித்தீர்த்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மட்டும் 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் நிரம்பியுள்ளதால் தங்க இடமில்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.