மதுரை கருப்பாயி ஊரணி அருகே குன்னத்துார் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கொலை…

மதுரையில் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன். அதிமுக பிரமுகரான அவருடைய நண்பர் ஊராட்சி ஊழியர் முனுசாமி. இருவரும் அன்றாடம் மாலை நேரத்தில் குன்னத்தூரில் உள்ள சமணர் படுக்கையில் அமர்ந்து பேசி பொழுதுபோக்குவது பழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலையும் மலைப்பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால், இரவு இருவருமே வீடு திரும்பவில்லை. இரு வீட்டாரும் தேடிவந்தனர்.
காலையில், சமணர் படுக்கைப் பகுதியில் இருவரும் படுகாயங்களுடன் சடலமாகக் கிடந்தனர். இது குறித்து கருப்பாயூரணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு எஸ்.பி. சுஜித் குமார், டிஐஜி ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

பொதுமக்கள் சாலை மறியல்:

போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுச் சென்ற நிலையில், இரட்டைக் கொலை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சிவகங்கை மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை..

மும்பை மாநகரம் முழுவதும் திடீர் மின்தடை பணிகள் முடக்கம்..

Recent Posts