முக்கிய செய்திகள்

மதுரையில் மதிமுக தொண்டர் நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளிப்பு : வைகோ கண்ணீர்..


மதுரையில் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் தொடங்கயிருந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க தொண்டர் ரவி தீக்குளித்தார். தீக்காயம் அடைந்த தொண்டர் ரவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தன் கண்முன் தீக்குளித்த தொண்டரைப் பற்றிப் பேசி வைகோ மேடையில் கண்ணீர்விட்டார்.

நியூட்ரினோ விழிப்புணர்வு நடைபயணக் கூட்டத்தில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வரும் மதிமுக நிர்வாகி ரவியை நேரில் சந்தித்து வைகோ நலம் விசாரித்தார்.