முக்கிய செய்திகள்

ம.பி.யில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் …


மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தேவால் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கூட்டு பலாத்காரம் செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அவர்கள் தீக்காயம் அடைந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து எரித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தவர்களில் ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றொருவரை தேடி வருகிறோம். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரையும் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.