
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோளும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று 2021 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.