நெல்லை தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவில் நதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை தாமிரபரணிக் கரைகளில் புஷ்கர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா தொடங்கி 24 -ந்தேதி வரை நடக்கிறது.
இதற்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் புனிதநீராடுவதற்கு 64 தீர்த்தகட்டம் மற்றும் 143 படித்துறைகளில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
தூத்துகுடி மாவட்டம் முறப்பநாட்டில் உள்ள குரு ஸ்தலத்தில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடினர்.
144 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றுவரும் தாமிரபரணி மஹா புஷ்கர விழாவின் 7ம் நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு 16 வகை அபிஷேகப்பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கண்ணாடி வளையல், குங்குமம், மஞ்சள் பட்டு ஆகிய பொருட்கள் தாமிரபரணி நதிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது .
தொடர்ந்து 7-ம் நாளான இன்று தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடி வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக செய்துள்ளது. மடாதிபதிகள் பலர் புனித நீராடிவருகின்றனர்..
புனித நீராட வரும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் தேவையில்லா பொருட்களை விட வேண்டாம் புண்ணிய நதியான தாமிரபரணியை போற்றிப் பாதுகாப்போம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.