கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு “சிவாலய ஓட்டம்” நடைபெற்று வருகிறது.
இந்த சிவாலய ஓட்டத்தின் போது காவி உடையணிந்த பக்தர்கள், கைகளில் விசிறிகளை ஏந்தியவாறு,
திருமலைக்கோவிலில் தொடங்கி திருநட்டாலம் வரையுள்ள 12 சிவாலயங்களை தரிசிக்கின்றனர்.
ஒவ்வொரு சிவாலயங்களிலும் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு ஓட்டத்தை தொடர்கின்றனர்.
108 கிலோ மீட்டர் தூரத்துக்கு “கோவிந்தா, கோபாலா” என முழக்கமிட்டவாறே அவர்கள் செல்கின்றனர்.
மகா சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிவாலய ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளதால் 12 சிவாலயங்களிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.