கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.

5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மகாதிர், அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் இனியும் உலகமயம் என்ற கருத்தாக்கத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. மற்ற நாடுகளை சந்தையாக்குவதற்காக மேலை நாடுகள் உலகமயமாக்கலை அறிமுகப்படுத்தின. ஆனால், தற்போது அதே உலகமயமாக்கலால் மேலை நாடுகள், கீழை நாடுகளுக்கு சந்தையாகி வருகின்றன. எனவேதான், சீனா உள்ளிட்ட கீழை நாடுகளிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு அமெரிக்கா தற்போது தள்ளப்பட்டுள்ளது. அதற்கான அணுகு முறைகளையும் அமெரிக்கா கையாளத் தொடங்கி உள்ளது. கீழை நாடுகளைப் பார்த்து மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி உள்ளன.

இவ்வாறு அந்தப் பேட்டியில் மகாதிர் கூறியுள்ளார்.

 

ஸ்டாலின் தலைமையில் `பொதுக்குழுக் கூட்டம்’ : தி.மு.க அறிவிப்பு

“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..

Recent Posts