மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே …

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மஹாஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாஜக – சிவசேனா கூட்டணியானது தேர்தல் முடிவுக்குப் பிறகு, யார் முதலைவராவது என்ற பிரச்சினையில் முறிந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனை தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனிடையே சிவசேனை கட்சி எம்எல்ஏக்களுடன் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவசேனை தலைவர்கள் சிலர் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று கட்சிகளின் தலைவர்களும் நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்றுக் கொண்டு,

மகாராஷ்டிரா விகாஷ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை: உச்சநீதிமன்றம்..

முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்

Recent Posts