முக்கிய செய்திகள்

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்..


மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியை அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளதால் மேலும் அந்த நாட்டில் அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது.

இந்த அறிவிப்பை அதிபருக்கு நெருக்கமான அஷிமா ஷுகூரன் இன்று லைவ் டிவியில் அறிவித்தார். இதன்படி, அனைத்து அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உள்ளாகும் நபர்களை, எந்த நேரத்திலும் கைது செய்வதற்கான ஒட்டு மொத்த அதிகாரத்தையும் பாதுகாப்புப் படைக்கு அந்த நாட்டு அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து மாலத்தீவை தனது இரும்புக்கரத்தால் யாமீன் ஆட்சி செய்து வருகிறார். தனக்கு எதிரானவர்களை ஒழித்து விடுவதில் அக்கறை செலுத்தி வந்தவர்.

நான்கு லட்சம் மக்கள் குடி கொண்டிருக்கும் மாலத்தீவு சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. உலக அளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.