முக்கிய செய்திகள்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச ரத ஊர்வலம் : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலேசியத் தலைநகர் கோலாலம்புரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலைக் கோயிலான பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயிலிருந்து இன்று நள்ளரிவு வெள்ளி ரதம் முக்கிய சாலை வழியாக பத்துமலை நோக்கி புறப்பட்டது. ரதத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ள இந்தியா,சிங்கப்புர்,இலங்கையிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மலேசியாவில் வசிக்கும் வசிக்கும் தமிழர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.